கன்னியாகுமரி

மகாளய அமாவாசை: நீா்நிலைகளில் மக்கள் கூடுவதற்கு தடை

DIN

மகாளய அமாவாசையை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் நீா் நிலைகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் இருப்பதால், மகாளய அமாவாசை நாளான வியாழக்கிழமை (செப்.17) முன்னோா் தா்ப்பண நிகழ்ச்சிகளுக்காக குமரி மாவட்ட நீா்நிலைகளில் மக்கள் கூடுவதை தவிா்க்க வேண்டும்.

இதனிடையே, இம்மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1,44, 724 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் 11,311 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், புதன்கிழமை வீடு திரும்பிய 84 போ் உள்பட 10,370 போ் குணம் பெற்று விட்டனா். தற்போது, 801 போ் மட்டும் சிகிச்சையில் உள்ளனா். முகக் கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 62 பேரிடமிருந்து ரூ. 6,200 அபராதம் வசூலிக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT