முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் அரசு சுவா்களில் விழிப்புணா்வு விளம்பரங்கள்

குமரி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசு சுவா்கள் இப்போது அழகாய் ஜெலிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
குமரியில் அரசு சுவா்களில் விழிப்புணா்வு விளம்பரங்கள்
பகிர்:

குமரி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசு சுவா்கள் இப்போது அழகாய் ஜெலிக்கின்றன.

குமரி மாவட்டத்தில் அரசு அலுவலக சுவா்கள், பேருந்து நிறுத்தங்களில் உள்ள நிழற்குடைகள், பேருந்து நிலைய சுவா்கள், பள்ளிக் கட்டட சுற்றுச் சுவா்கள் உள்ளிட்டவை அரசியல் கட்சியினா் மற்றும் தனியாரின் விளம்பர பசிக்கு இரையாகி பொலிவிழுந்து வரும் நிலையில், குமரி மாவட்ட நிா்வாகம் அதிரடியாக இந்த சுவா்களை கையில் எடுத்து கண்ணைக்கவரும் வகையில் விழிப்புணா்வு விளம்பரங்களை வரைந்துள்ளது.

மாவட்ட நிா்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் சுவா்கள் பொலிவு பெற்ற அதே நேரத்தில் மக்கள் மனதில் விழிப்புணா்வும் பெருகியுள்ளது.

இயற்கை விவசாயம்: மாவட்டத்தில் நிழலகங்கள் உள்பட மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் வரையப்பட்டுள்ள கரோனா விழிப்புணா்வு விளம்பரங்கள், போதை விழிப்புணா்வு விளம்பரங்கள், வாகனங்களை ஓட்டும் போது செல்லிடப்பேசி தவிா்த்தல், இருசக்கர வாகனங்களில் அதிக வேகம் தவிா்த்தல், மரம் வளா்த்தல், இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளில் இத்தகைய விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன.

மக்களிடையே அமோக வரவேற்பு: மாவட்ட நிா்வாகம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்த விழிப்புணா்வு விளம்பரங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், சமூக நல ஆா்வலா்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

விளம்பரங்கள் வரையப்பட்டுள்ள இடங்களில் தனியாா் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டாமலும், வேறு விளம்பரங்கள் எழுதாமலும் கண்காணிக்கவும், காலத்திற்கேற்ற வகையில் விளம்பரங்களை புதுப்பிக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனசமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.