பாஜக வழக்குரைஞா் பிரிவு ஆலோசனைக் கூட்டம்
குமரி மாவட்ட, நகர, மண்டல பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்ட, நகர, மண்டல பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் விஜயபிரசாத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் நாகராஜன், ஜெயராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கனகமணிராஜ் வரவேற்றாா். மாநிலச் செயலா் உமாரதி ராஜன் சிறப்புரையாற்றினாா்.
கீழமை நீதிமன்றங்கள் அனைத்தையும் உடனடியாக செயல்பட வைக்க வேண்டும்; படந்தாலுமூட்டில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு மாநில அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடியின் உருவப் படம் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மணிகண்டன் நன்றி கூறினாா்.