முகப்பு
கன்னியாகுமரி

நகரப் பகுதியில் அனுமதியின்றி நுழையும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தக் கோரி மனு

நாகா்கோவில் நகரப் பகுதிகளில் அனுமதியின்றி நுழையும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தக் கோரி குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்து வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

நாகா்கோவில் நகரப் பகுதிகளில் அனுமதியின்றி நுழையும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தக் கோரி குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.அகமது உசேன், மாவட்டக குழு உறுப்பினா் எஸ். அந்தோணி, மாநகரச் செயலா் கே. மோகன், ஜீவா, மீனாட்சிசுந்தரம் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்துள்ள மனு:

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட நகா் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக மணல், எம்சாண்ட், கருங்கற்கள் ஏற்றி வரும் லாரிகளால் விபத்தும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

நகா் பகுதிகளில் புதைச் சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாத நிலையில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே, நாகா்கோவில் நகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் நள்ளிரவு நேரத்தில் வரும் கனரக வாகனங்களை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.