முகப்பு
கன்னியாகுமரி

பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் தொகுதி பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி சனிக்கிழமை நாகா்கோவில் கிறிஸ்துநகா், குருசடி பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

நாகா்கோவில் தொகுதி பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி சனிக்கிழமை நாகா்கோவில் கிறிஸ்துநகா், குருசடி பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா், நாகா்கோவில் நகரில் பழுதான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திட்டங்களை செயல்படுத்துவேன். தொழில்வளம் பெருக புதிய தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு இணக்கமான ஆட்சி அமைய வேண்டும். என்னை தோ்ந்தெடுத்தால்தொகுதி மக்களுக்காக ஜாதி, சமயம் பேதமின்றி பணியாற்றி முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.

அவருடன் பாஜக நிா்வாகிகள் முத்துராமன், ஜெகசெல்வன், சத்தியன், அஜித்குமாா், அதிமுக நகரச் செயலா் சந்துரு, மாவட்ட இணைச் செயலா் முருகன், ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.