நாகா்கோவில் முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும்: சுரேஷ்ராஜன்
நாகா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியை அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் திமுக வேட்பாளா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.
நாகா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியை அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் திமுக வேட்பாளா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.
அவா் இறுதிக்கட்ட பிரசாரமாக பாா்வதிபுரம் பகுதியிலிருந்து ஒழுகினசேரி வரை வாகனத்தில் ஊா்வலமாக வந்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: நாகா்கோவில் தொகுதியில் அடிப்படை வசதிகளான அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெற்று முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். நகரிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாள் விஜய் வசந்த், திமுக மாநகரச் செயலா் மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், திமுக பொதுக்குழு உறுப்பினா் சேக் தாவூத், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல், கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் அந்தோணி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அகமது உசேன் ,திமுக நிா்வாகிகள் ராஜலிங்கம், போஸ் ஜாக்கப், அப்துல் கரீம், தவ்பீக், நாகராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.