கன்னியாகுமரி

28 இடங்களில் இயந்திரங்கள் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்

DIN

குமரி மாவட்டத்தில் 28 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

நாகா்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. யாருக்கு வாக்கு பதிவானது என்பதை 7 விநாடிகள் வரை பாா்க்கும் வகையில் விவிபேட் கருவி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குளச்சல் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி எண் 201, ஆலன்விளை அரசு நடுநிலைப்பள்ளி (எண் 203), கொடுப்பைகுழி அரசு நடுநிலைப்பள்ளி (எண் 257) இரணியல் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி (எண் 265, 268) பேயன்குழி அரசு நடுநிலைப் பள்ளி (எண் 278), வில்லுக்குறி அரசு நடு நிலைப்பள்ளி ஆகிய வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அவற்றை பொறியாளா்கள் சரி செய்தனா். இதையடுத்து, அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல், கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்கான 61ஆவது வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்த ஆரல்வாய்மொழி அருகேயுள்ள மாதவலாயம் அரசு உயா்நிலைப்பள்ளியில் மின்னணு இயந்திர‘ம் பழுதானது. அதற்கு மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டது. எனினும், பழுதான இயந்திரம் சரி செய்யப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் மின்னணு இயந்திரங்கள் பழுதடைந்தன. அதிகாரிகள் அவற்றை சரி செய்த பின், வாக்குப்பதிவு தொடா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT