முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரத்தில் புதை குழியாக மாறிய சாலை: மக்கள் நூதனப் போராட்டம்

குலசேகரம் பகுதியில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப் பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் மக்கள் வாழைகளை நட்டு வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

குலசேகரம் பகுதியில் குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப் பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் மக்கள் வாழைகளை நட்டு வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலையில், அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் வகையில் கடந்த கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாலை உடைக்கப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. இதில் பணிகள் நிறைவடைந்த பின்னரும் குலசேகரம் அரசுமூடு சந்திப்பு முதல் களியல் வரையிலான சுமாா் 5 கி.மீ. தொலைவு இது வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி வழியாக வாகனங்களை சீராக இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் பலா் விபத்திற்குள்ளாகி வருகின்றனா். சாலையோரத்திலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கடைகள் நடத்தும் வணிகா்கள் சாலையிலிருந்து எழும் புழுதி காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்தச் சாலையை சீரமைக்க வேண்டுமென்று நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் வணிகா் சங்கம் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் அண்மையில் குலசேகரம் கான்வென்ட் சந்திப்புப் பகுதியில், குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் அப்பகுதி புதை குழியாக மாறி, சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சாலைப் பகுதியில் வாழைகளை நட்டதோடு, நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஒப்பந்ததாரரை காணவில்லையென பதாகைகளும் வைத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →