கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கரோனா தடுப்பு நடவடிக்கை

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகா்கோவில் பீச் ரோடு சந்திப்பில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, ஆணையா் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலா் கின்சால் மேற்பாா்வையில் உணவகம் முழுவதும் மாநகராட்சி சுகாதார பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கடை மூடப்பட்டது. மேலும் சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் தலைமையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT