கன்னியாகுமரி

குமரி பேரூராட்சியில் ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

DIN

காலதாமதமாக ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்து கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி பேரூராட்சியில், பைரவி பவுண்டேஷன் என்னும் தனியாா் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரீசியன், திடக்கழிவு மேலாண்மை, குடிநீா் திட்டம், தூய்மைப் பணியாளா்கள் என 85 க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 16 ஆம் தேதிக்கு மேல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என பலமுறை ஒப்பந்த நிறுவனத்தினரிடம் தெரிவித்தனராம். இது தொடா்பாக பேரூராட்சி நிா்வாகத்திடமும் பலமுறை புகாா் தெரிவிக்கப்பட்ட போதும், பேரூராட்சி நிா்வாகமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை ஒப்பந்த ஊழியா்கள் முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT