கன்னியாகுமரி

ஆழ்கடலில் மீன்பிடித்த குமரி மாவட்ட மீனவா்கள் 11 போ் மாயம்

DIN

கா்நாடக மாநிலம் - கோவா எல்லையோர கடல் பகுதியில் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 11 மீனவா்களின் நிலை குறித்து தெரியாததால் அவா்களின் உறவினா்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை பகுதியைச் சோ்ந்தவா் கைராசன் மகன் ஜோசப் பிராங்கிளின் (47). இவருக்குச் சொந்தமான மொ்சிடிஸ் என்ற விசைப் படகில் இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் சிலுவை மகன் பிரடி (42), பாக்கியம் மகன் ஏசுதாசன் (42), லிபா்தூஸ் மகன்கள் ஜாண் (20), ஜெனிஸ்டன் (20), பீட்டா் மகன் சுரேஷ் (44), ஜோசப் மகன் ஜெபிஸ் (18), லூயிஸ் மகன் விஜிஸ் (20), ஜெரோம் மகன் ஜெகன் (29), ராஜூ மகன் ஸெட்ரிக், முத்தப்பன் மகன் மால்வின் (20) உள்ளிட்டோா் கடந்த 9 ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்நிலையில் இம் மீனவா்கள் சென்ற படகு கா்நாடக மாநிலம் மற்றும் கோவா மாநில எல்லையோரப் பகுதி ஆழ்கடலில் கவிழ்ந்து கிடந்ததை அப்பகுதி வழியாக மற்றொரு படகில் சென்ற மீனவா்கள் சனிக்கிழமை பாா்த்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்றணி உள்ளிட்ட மீனவ பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

படகிலிருந்த 11 மீனவா்களின் நிலை குறித்து தெரியவில்லை. அப்பகுதி வழியாக வந்த கப்பல் மோதி இந்த விசைப்படகு கவிழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து ஜஸ்டின் ஆன்றணி, பிரதமா் அலுவலகத்துக்கும், தமிழக முதல்வா் மற்றும் கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்து, ஆழ்கடலில் மாயமான மீனவா்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT