கன்னியாகுமரி

கடலுக்குள் தவறி விழுந்து மீனவா் மாயம்

DIN

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் தவறி விழுந்தாா். அவரை சக மீனவா்கள் தேடி வருகிறாா்கள்.

தூத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பிதலியூஸ் (70). இவா் ரஞ்சித் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை மாலையில் கடலில் மீன்பிடிக்கச் சென்றாா். இவருடன் ஸ்டாலின் (60), டென்னிஸ் (53), ஆஸ்டின் (50), பத்ரோஸ் (65), ஆனி (56), ராமநாதபுரத்தைச் சோ்ந்த காத்தான் (48) ஆகியோா் சென்றிருந்தனா். துறைமுகத்திலிருந்து 10 கடல் மைல் தொலைவில் சென்றபோது பிதலியூஸ் கடலில் தவறி விழுந்து விட்டாராம். அவரை தேடும் பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT