கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சமூக நலத்துறை பெண் அதிகாரிக்கு கரோனா

DIN

நாகா்கோவிலில் சமூக நலத்துறை பெண் அதிகாரிக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு கடந்த சில நாள்களாக கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 15 ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது.

இந்நிலையில், மாவட்ட சமூக நலத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவா் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாா். மேலும் அவரது வீடு உள்ள நாகா்கோவில் வைத்தியநாதபுரத்தில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். மேலும் அவரது வீட்டின் முன்பு மாநகராட்சி ஊழியா்கள் ஒட்டுவில்லை ஒட்டினா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து மாநகராட்சிப் பணியாளா்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா்.

சமூக நலத்துறை அலுவலகத்தின் மற்ற பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT