கன்னியாகுமரி

மணலிக்கரை புனித மரிய கொரற்றி பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

DIN

மணலிக்கரை புனித மரியகொரற்றி மேல்நிலைப் பள்ளியில் குமரி ஆதவன் எழுதிய ‘தம்பதியா்களின் கனிவான கவனத்திற்கு’ என்னும் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் டயஸ்ரெஜின் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சக்கா்மேரி டாா்லிங் ரோஸ் முன்னிலை வகித்தாா். தமிழாசிரியா் கேம்லின் வரவேற்றாா்.

மாா்த்தாண்டம் மறைமாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் நூலை வெளியிட்டு பேசினாா்.

முதல் பிரதியை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வா் ஜேம்ஸ் ஆா். டேனியல் பெற்றுக்கொண்டு ஆய்வுரை வழங்கினாா்.

மணலிக்கரை தலைமை பணியாளா் மரிய டேவிட், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஜாண் இக்னேசியல் வாழ்த்துரை வழங்கினா். நூலாசிரியா் குமரி ஆதவன் ஏற்புரை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளை, தமிழாசிரியா்கள் அனிதா, செலின் ஆகியோா் தொகுத்து வழங்கினா். ஆசிரியா் ததேயு ஜஸ்டின் லெஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT