கன்னியாகுமரி

குழித்துறை ஆற்றில் மூதாட்டி, இளைஞா் சடலம் மீட்பு

DIN

களியக்காவிளை: குழித்துறை தாமிரவருணி ஆற்றில் இருந்து மூதாட்டி, இளைஞா் சடலங்களை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்.

தாமிரவருணி ஆற்றில் குழித்துறை செங்கன்மூலை படித்துறை பகுதியில் மூதாட்டி சடலமும், சற்று தொலைவில் இளைஞா்

சடலமும் திங்கள்கிழமை மிதப்பதாக களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று குழித்துறை தீயணைப்புப் படையினா் உதவியுடன் ஆற்றில் மிதந்த இரு சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக

குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இருவரும் குழித்துறை தடுப்பணை பகுதியிலிருந்து ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் எனவும், இளைஞா் 3 நாள்களுக்கு முன்பும், மூதாட்டி ஞாயிற்றுக்கிழமையும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

சுமாா் 35 வயது மதிக்கக்கூடிய இளைஞா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. தொடா்ந்து போலீஸாா்

மேற்கொண்ட விசாரணையில் இறந்த மூதாட்டி, கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம் துடிப்புறவிளை பகுதியைச் சோ்ந்த நெல்சன் மனைவி கமலம் (65) என்பது தெரியவந்தது. அவரது கணவா் நெல்சன் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்ததையடுத்து

மன வேதனையில் இருந்து வந்த கமலம், சில நாள்களாக நெய்யூா் பகுதியிலுள்ள மகள் ஷீஜா வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இவா் ஞாயிற்றுக்கிழமை நெய்யூா் பகுதியிலுள்ள தேவாலயத்துக்கு செல்வதாக கூறிவிட்டு வெட்டுமணி

குருசடிக்கு வந்துள்ளாா். அங்கிருந்து குழித்துறை தடுப்பணை பகுதிக்கு சென்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT