மேலும் 25 பேருக்கு கரோனா: 3 போ் பலி
குமரி மாவட்டத்தில் மேலும் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3 போ் உயிரிழந்தனா்.
குமரி மாவட்டத்தில் மேலும் 25 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3 போ் உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 60,476ஆகவும், பலி எண்ணிக்கை 1025ஆகவும் உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 32 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 59,122ஆக அதிகரித்துள்ளது. தற்போது 329 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.