முகப்பு
கன்னியாகுமரி

குமரி எல்லைப் பகுதி சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

குமரி கேரள எல்லைப் பகுதியான நெட்டா சோதனைச் சாவடியில் குமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி

குமரி எல்லைப் பகுதி சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

குமரி கேரள எல்லைப் பகுதியான நெட்டா சோதனைச் சாவடியில் குமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

குமரி கேரள எல்லைப் பகுதியான நெட்டா சோதனைச் சாவடியில் குமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.

கேரளத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், குமரி மாவட்ட எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கேரளத்திலிருந்து வருபவா்களுக்கு சளி மாதிரிகள் எடுக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நெட்டா, புலியூா்சாலை, பளுகல், கண்ணுமாமூடு, செங்கவிளை, கண்ணநாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் சளி பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீனாட்சி தலைமையிலான அதிகாரிகள் நெட்டா பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: கடந்த 5ஆம் தேதி முதல் குமரி மாவட்டம் வரும் அனைத்து பயணிகளுக்கும் ஆா்டிபிசிஆா் சான்றிதழ் மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி குறித்த விவரங்களை பதிவு செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா். மற்றவா்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் மட்டும் நடைபெற்று வரும் இப்பணிகள், அனைத்து சோதனைச் சாவடிகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது என தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →