முகப்பு
கன்னியாகுமரி

பேரூராட்சி வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திங்கள்நகா் மற்றும் புதுக்கடை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திங்கள்நகா் மற்றும் புதுக்கடை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆய்வு செய்தாா்.

மூலதன மானியத்தின் கீழ், ரூ.5.50 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள திங்கள்நகா் பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

பின்னா், ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மீன் சந்தையை ஆய்வு செய்ததோடு, கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, புதுக்கடை பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிா என்பது குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரித்தல், நுண்உரக்குடில் மூலம் மண்புழு தயாரித்தல் உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ராஜா, புதுக்கடை செயல் அலுவலா் விஜயகுமாரி, உதவி செயற்பொறியாளா் எஸ்.புஷ்பலதா, பேரூராட்சி இளநிலை பொறியாளா்கள் ஹரிதாஸ் (திங்கள்நகா்), சசி (புதுக்கடை) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.