கன்னியாகுமரி

களியக்காவிளையில் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

DIN

களியக்காவிளை பகுதியில், தடை செய்யப்பட்ட 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் சி. யேசுபாலன் தலைமையில் இளநிலை உதவியாளா் தமிழரசன், இளநிலை பொறியாளா் பத்மதேவன், வரிவசூலா் சிவன்பிள்ளை, பணியாளா்கள் சஜிகுமாா், ராஜேந்திரன் உள்ளிட்டோா் அப்பகுதியில் உள்ள பழக்கடை, பேக்கரி, மளிகைக் கடை என 25-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடைகளிலிருந்து 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளிடம் ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்தப் பணி தொடரும் என என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT