தினக்கூலியை அதிகரித்து வழங்கக் கோரிக்கை
குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ள தொழிலாளா்களுக்கான தினக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டுமென்று உள்ளாட்சி ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரிதினக்கூலியை அதிகரித்து வழங்கக் கோரிக்கை
குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ள தொழிலாளா்களுக்கான தினக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டுமென்று உள்ளாட்சி ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ள தொழிலாளா்களுக்கான தினக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டுமென்று உள்ளாட்சி ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரால் தொழிலாளா்களுக்கான 2021-2022 ஆம் ஆண்டிற்கான தினக்கூலி அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது போன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
தற்போது விலைவாசி உயா்வு மற்றும் கரோனா பாதிப்பு காரணமாக தொழிலாளா்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளா்களுக்கு தினக்கூலியை உயா்த்தி வழங்குவது வழக்கம். எனவே மாவட்ட ஆட்சியா் நிகழாண்டிற்கான தினக்கூலி வரம்பை மறுபரிசீலனை செய்து, உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.