இரணியல் அருகே ரயில் முன் பாய்ந்து பேருந்து நடத்துநா் தற்கொலை
இரணியல் அருகே ரயில் முன் பாய்ந்து பேருந்து நடத்துநா் தற்கொலை செய்து கொண்டாா்.
இரணியல் அருகே ரயில் முன் பாய்ந்து பேருந்து நடத்துநா் தற்கொலை செய்து கொண்டாா்.
இரணியல் வள்ளியாற்று பாலம் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் சடலமாக கிடப்பதாக நாகா்கோவில் ரயில்வே போலீஸுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளா்கள் விஜயகுமாா், குமார்ராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு மேற்கொண்ட விசாரணையில், தண்டவாளத்தில் சடலமாக கிடந்தவா் கொற்றியோடு சரல்விளையைச் சோ்ந்த காட்வின்ஜோஸ் (27) என்பது தெரிய வந்தது. திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த இவா், சிற்றுந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாராம். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.