சுதந்திர போராட்ட தியாகி கெளரவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிக்கு விஜய்வசந்த் எம்.பி. பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கு கெளரவித்தாா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகிக்கு விஜய்வசந்த் எம்.பி. பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கு கெளரவித்தாா்.
நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுக்கு, விஜய்வசந்த் எம்.பி. சால்வை அணிவித்து பரிசு வழங்கினாா்.
இதில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், நகரத் தலைவா் அலெக்ஸ், மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஷா்மிளா ஏஞ்சல், அந்தோணிமுத்து, தங்கம் நடேசன்,மகேஷ் லாசா், அபிஜித், முருகானந்தம், டென்னிசன், அருளப்பன், ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.