கன்னியாகுமரி

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி

DIN

களியக்காவிளை: களியக்காவிளையில் பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மேல்புறம் வட்டார வள மையத்தில் களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியை அடுத்துள்ள தோட்டம் நகா்

மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப், பெற்றோா்-ஆசிரியா் கழகத தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா், கிராம கல்விக் குழு தலைவா் சி. சுரேஷ்குமாா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் எஸ். ரஞ்சினி, மேல்புறம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் டி.எஸ். ஷாஜி, ஆசிரியா் பயிற்றுநா் ஏ.ஆா். கீதா, சிறப்பு ஆசிரியா் பயிற்றுநா் டி. சஜுதா, ஆசிரியா் பி. ஞானதாஸ், ஆசிரியை எஸ்.கே. லேகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி செல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவா்கள், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT