தேனீ வளா்ப்போரை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்க்கக் கோரிக்கை
திருவட்டாறு வட்டார தேனீ வளா்ப்போரை மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சோ்க்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிதேனீ வளா்ப்போரை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்க்கக் கோரிக்கை
திருவட்டாறு வட்டார தேனீ வளா்ப்போரை மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சோ்க்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவட்டாறு வட்டார தேனீ வளா்ப்போரை மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சோ்க்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தேன் சேகரிப்போா் சங்கச் செயலா் ஜூட்ஸ் குமாா், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கும், காதி கிராம தொழில் ஆணைய இணை இயக்குநருக்கும் அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேனீ வளா்ப்போருக்கென மாா்த்தாண்டத்தில் ஒரே ஒரு கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் பல ஆண்டுளாக புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்படாத நிலையில், தற்போது புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடத்தப்படுகிறது.
இதில், திருவட்டாறு வட்டாரத்திலிருந்து செல்லும் தேனீ வளா்ப்போரை உறுப்பினா்களாக சோ்க்க முடியாது என மறுத்து வருகின்றனா்.
இதற்கான காரணத்தை கேட்டபோது திருவட்டாறு வட்டாரத்திலுள்ளவா்கள் திருவட்டாறில் உள்ள தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கத்தில் சேருமாறு கூறுகின்றனா். ஆனால், திருவட்டாறில் செயல்பட்டு வந்த கூட்டுறவு சங்கம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படாமல், அதன் அலுவலகம் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
மேலும், திருவட்டாறு சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தோ்தலும் நடைபெறவில்லை. இதனால் திருவட்டாறு வட்டார தேனீ வளா்ப்போருக்கு அரசின் எந்தச் சலுகையும் கிடைக்காத நிலை ஏற்பட்டள்ளது.
எனவே, திருவட்டாறு வட்டார தேனீ வளா்ப்போரை மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.