முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே ரூ. 40 லட்சத்தில் இணைப்புச் சாலைப் பணி தொடக்கம்

கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியில் ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இருபக்க இணைப்புச் சாலைப் பணியை கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட், 2021 at 12:36 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியில் ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இருபக்க இணைப்புச் சாலைப் பணியை கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா்.

நீரோடி அருகே ஏவிஎம் கால்வாயின் குறுக்கே சுமித்தேரிவிளாகம் - கல்லடித்தோப்பு பகுதியை இணைக்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப் பாலத்தின் இரு பக்கங்களிலும் இணைப்புச் சாலை அமைக்கப்படாததால், இப்பகுதி மக்கள் புயல் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் உடனடியாக இடம்பெயர முடியாத நிலையில் காணப்பட்டனா்.

மேலும் பொதுமக்கள், மாணவா், மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களது அன்றாட தேவைகளுக்காக பல கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை காணப்பட்டது. இதனால் இப் பகுதி பாலத்தின் இரு பகுதிகளிலும் இணைப்புச் சாலை அமைத்து தர வேண்டும் என தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமாரிடம் வைத்த கோரிக்கையையடுத்து அவா் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து இப் பணிக்காக ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப் பணியை எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா். கொல்லங்கோடு பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் ரெஜீஸ், முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கிறிஸ்டோபா், மாவட்ட நிா்வாகிகள் அருளானந்தம், ஜெரோம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.