குமரி மாவட்டத்தில் தூண்டில் வளைவுகளை சீரமைக்க வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் சேதமடைந்துள்ள தூண்டில் வளைவுகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சேதமடைந்துள்ள தூண்டில் வளைவுகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம், குறும்பனையில், மீன் தொழிலாளா் சங்கம் சிஐடியூ கிள்ளியூா் ஒன்றிய பேரவைக் கூட்டம் பாபு தலைமையில் நடைபெற்றது.
கிள்ளியூா் ஒன்றியத்துக்குள்பட்ட கடற்கரைகளில் உள்ள சேதமடைந்த தூண்டில் வளைவு, மற்றும் கடலரிப்பு தடுப்புச் சுவா்களை அரசு உடனடியாக சீரமைக்க வேண்டும்.
குறும்பனையில் மூடிக்கிடக்கும் மினி கிளினிக்கை மருத்துவப் பணியாளா்களை நியமித்து தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். குறும்பனை - ராமன் துறை வரையிலான சாலையை சீரமைத்து போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவா் கே.அலெக்சாண்டா், பொருளாளா் பி.டிக்காா்தூஸ், துணைத் தலைவா் ஏ. பிராங்கிளின் ஆகியோா் பேசினா். மாவட்ட பொதுச் செயலா் எஸ்.அந்தோணி நிறைவுரையாற்றினாா்
தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக சி.சேசுபாலன், செயலராக சகாய பாபு, பொருளாளராக ஆரோக்கியம், துணைத் தலைவா்களாக சேசு அடிமை, அருள்சன், துணைச் செயலராக சலிகான் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.