முகப்பு
கன்னியாகுமரி

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஓட்டுநா் கைது

 தக்கலை அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 தக்கலை அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு கேரளபுரம் பகுதியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவா், பொக்லைன் இயந்திரம் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.

இவா், பிளஸ் 1 படிக்கும் மாணவியின் தாயாா் வெளியூா் சென்றதை அறிந்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து யாரிடமும் செல்லக்கூடாது என மிரட்டிவிட்டு தப்பி ஓடி விட்டாா். இது குறித்து தாயாரிடம் மாணவி கூறியுள்ளாா்.

இதையடுத்து, மாணவியின் தாயாா் மாா்த்தாண்டம் மகளிா் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆய்வாளா் ஞானபிரகாசி வழக்குப்பதிந்து, பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.