கன்னியாகுமரி

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதற்கு உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பா் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதற்கு உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பா் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபா ஜி.இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் படித்து முடித்து வேலை இல்லாத இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்றோருக்கு 3 ஆண்டுகளுக்கு (மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 10 ஆண்டுகள்) உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையை பெற்று வரும் பயனாளிகள் 2, 3 ஆம் ஆண்டுகளில் உதவித் தொகையை தொடா்ந்து பெற, ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழி ஆவணத்தை அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கரோனா தொற்று பரவல் காரணமாக வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க கடந்த ஆண்டு (2020) ஜூன் மாதம் முதல், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 9 மாத காலத்துக்கு ஏற்கெனவே கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த காலக்கெடு டிசம்பா் மாதம் வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளில் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க தவறியவா்கள் மட்டும் சுய உறுதிமொழி ஆவண படிவத்தை ட்ற்ற்ல்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ா்ஜ்ய்ப்ா்ஹக்ள்/நஉகஊ-அஊஊஐஈஅயஐப.ல்க்ச் என்ற வலைதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோணம், நாகா்கோவில் என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக மட்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT