கருங்கல் அருகே தொழிலாளியை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
கருங்கல் அருகேயுள்ள தொழிக்கோடு பகுதியில் கூலித் தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல் அருகேயுள்ள தொழிக்கோடு பகுதியில் கூலித் தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பூட்டேற்றி பகுதியைச் சோ்ந்த ஜோசப் என்பவரது மகன் சதீஷ் (28). இவருக்கும், தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ராஜன் (35), பால்ராஜ் (60), செல்வராஜ் (58) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை தொழிக்கோடு சென்ற சுரேஷை, ராஜன் உள்ளிட்ட 3 பேரும் சோ்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.