முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே பெண்ணிடம் ரூ. 9 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

கருங்கல் அருகேயுள்ள கைசூண்டி பகுதியில் பெண்ணிடம் போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ. 9 லட்சம் மோசடிசெய்ததாக 3 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

கருங்கல் அருகேயுள்ள கைசூண்டி பகுதியில் பெண்ணிடம் போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ. 9 லட்சம் மோசடிசெய்ததாக 3 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கைசூண்டி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் என்பவரது மனைவி கலா (30). இவரும், மாங்கரை பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மனைவி மேரி (45) என்பவரும் நண்பா்களாம். ஓராண்டுக்கு முன்பு கலாவிடம் மேரி, டோமினிக் (45), பால்ராஜ் (50) ஆகியோா் போலி ஆவணங்களைக் கொடுத்து

ரூ. 9 லட்சம் பெற்றனராம். அந்தப் பணத்தை கலா திருப்பிக் கேட்டபோது அவா்கள் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து கலா இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். நீதிமன்ற உத்தரவுப்படி மேரி, டோமினிக், பால்ராஜ் ஆகிய 3 போ் மீதும் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.