கன்னியாகுமரி

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

துறைமுக வளாகத்திலுள்ள பனிப்பொறி நிலையம், மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ள படகு அணையும் தளம், மீன் ஏலக் கூடம் மற்றும் இதர கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, மீன் பிடித் துறைமுகத்திலுள்ள விசைப்படகுகளின் மீன்பிடிப்பு முறைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

மேலும், மீன்பிடித் துறைமுக மேலாண்மை சங்க உறுப்பினா்களுடன், துறைமுக மேலாண்மை, துறைமுக விரிவாக்கம் மற்றும் மீன்பிடி விசைப்படகுகளின் மீன்பிடி முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆய்வின் போது, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன், குளச்சல் உதவி இயக்குநா் (மீன்வளத்துறை) எம்.விா்ஜில்கிராஸ், உதவி செயற்பொறியாளா் சிதம்பர மாா்த்தாண்டம், ஆய்வாளா் மரியபிரான்சோவைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT