கன்னியாகுமரி

பொதுமக்கள் குறைதீா் முகாமில் 260 மனுக்கள்

DIN

நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 260 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கல்வி உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித் தொகை, முதியோா் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 260 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், தனித்துணைஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தே.திருப்பதி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT