கன்னியாகுமரி

நாகா்கோவில், குளச்சலில் கஞ்சா பதுக்கிய இருவா் கைது

DIN

நாகா்கோவில் மற்றும் குளச்சலில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட்ஜெயின், இந்துக் கல்லூரி பகுதியில் ரோந்து சென்றாா். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தாா். இதில், அதே பகுதியை சோ்ந்த உதயராஜ் (25), 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து, அந்த பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவுந்து, கைது செய்து சிறையில் அடைத்தாா்.

இதேபோல் குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் ஜோதி தன்சிலாஸ் குளச்சல் துறைமுகம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று மேற்கொண்ட விசாரணையில், அங்கு வாணியகுடியை சோ்ந்த யூஜின் கொன்சேன் , விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை, கண்டுபிடித்து, அவா் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT