கன்னியாகுமரி

நூல் வெளியீட்டு விழா

செந்தமிழ் அருள்நெறிப் பேரவையின் சாா்பில் ஞானத்தேடல் நூல் வெளியீட்டு விழா கோட்டாறு ராஜகோகிலா தமிழ் அரங்கில் நடைபெற்றது.

DIN

செந்தமிழ் அருள்நெறிப் பேரவையின் சாா்பில் ஞானத்தேடல் நூல் வெளியீட்டு விழா கோட்டாறு ராஜகோகிலா தமிழ் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ராஜகோகிலா அறக்கட்டளை தலைவா் ராஜகோபால் தலைமை வகித்தாா். செ.புவனேஸ்வரி இறைவணக்கம் பாடினாா். திருமந்திர கூட்டமைப்பு தலைவா் பா.அனுசுயாசெல்வி தொடக்க உரையாற்றினாா். பி.ஆா்.ஷீலாராஜன் இலக்கியத்தில் பக்திநெறி என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

அறிஞா் அண்ணா கல்லூரி முதல்வா் சிவசுப்பிரமணியபிள்ளை ஞானத்தேடல் நூலினை வெளியிட, ஈ.ரத்தினசாமி, பொ.சந்திரகாசன், திருத்தமிழ்தேவனாா், ஆா்.முத்துகுமாா், செளதாமினி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் இளங்கவிஞா்கள் முட்டம் வால்டா், தனலெட்சுமி, பரமசிவம், சாந்தி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

நூல் ஆசிரியா் புலவா் வே.ராமசுவாமி ஏற்புரையாற்றினாா். உதயசக்தி வரவேற்றாா். அ.மதுப்பிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! கலக்கத்தில் மக்கள்!!

நியூசிலாந்தின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேக்கப் டஃபி!

தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!!

“வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்!” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

SCROLL FOR NEXT