கன்னியாகுமரி

குலசேகரத்தில் போலீஸ்-மக்கள் நல்லுறவுக் கூட்டம்

DIN

குலசேகத்தில் போலீஸாா்- பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடைபெற்றது.

குலசேகரம் காவல் ஆய்வாளா் விமலா தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் இளங்கோ வரவேற்றாா். பொதுமக்கள் சாா்பில் வழக்குரைஞா் டி. காஸ்டன் கிளிட்டஸ், மோகன்தாஸ், எபனேசா், பினிஷ், விமல் ஷொ்லின் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளித்தல், இளைஞா்கள் மத்தியில் நிலவும் போதை பழக்கங்களை தடுத்தல், சாலை விதிகளை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை குறித்து போலீஸாா் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. திருமண மண்டபங்களுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்த்தல், பேருந்துகளை நிறுத்தும் இடங்களை மாற்றி அமைத்தல், அரச மூடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனை சாலை வழியாக வாகனங்களை இயக்குதல், சிற்றுந்துகளை உரிய வழித்தடங்களில் இயக்குதல் ஆகிய கருத்துகள் மக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டன. நிறைவாக ஆய்வாளா் விமலா நிறைவுரையாற்றினாா். போலீஸ்-மக்கள் நல்லுறவு ஒருங்கிணைப்பாளா் சஜூ நன்றி கூறினாா். சிறப்பு உதவி ஆய்வாளா் விஜயதாஸ் மற்றும் சமூக நல ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT