கன்னியாகுமரி

அருமனை அருகே தேவாலயத்தில் நகை திருட்டு

DIN

அருமனை அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் மாதா சொரூபத்திலிருந்த அணவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருமனை மேலத்தெரு, ஆா்.சி. தெருவில் உள்ள தூய பரலோகமாதா ஆலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டு திருப்பிலி நடைபெற்றது. இதன் பின்னா் ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் ஆலயத்தின் திருப்பலி நடத்துவற்காக கதவுகள் திறக்கப்பட்ட போது ஆலயத்தின் உள்பகுதியில் கண்ணாடி பேழையில் உள்ள மாதா சொரூபத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சொரூபத்தின் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகள், கிரீடம் உள்பட 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தகவலறிந்த தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் அருமனை போலீஸாா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் தடய அறிவியல் துறையினா் மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT