கன்னியாகுமரி

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: வெறிச்சோடிய குமரி கடற்கரை

DIN

புத்தாண்டையொட்டி, கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை பகுதிகள் வெள்ளிக்கிழமை நாள்முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பதற்கு அரசு தடைவிதித்திருந்தது. இந்நிலையில் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியிலும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை 9 க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸாா் தடுப்புவேலி அமைத்து கன்னியாகுமரிக்கு வந்த அனைவரையும் திருப்பி அனுப்பினா்.

இதனால் முக்கடல் சங்கமம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், விவேகானந்தா் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஆனால், பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால் அங்கு ஏராளமான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

சூரிய உதயம்: புத்தாண்டின் முதல் சூரிய உதயம் பாா்க்க பகவதியம்மன் கோயில் கிழக்குவாசல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனா். மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியவில்லை. மேலும், வட்டக்கோட்டைக்கு செல்ல பயணிகள் அனுமதிக்கப்பட்டதால் அங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT