கன்னியாகுமரி

கேரள தமிழா்களுக்கு குடியுரிமை சான்று வழங்க வலியுறுத்தல்

DIN

கேரளத்தில் வசிக்கும் தமிழா்களுக்கு குடியுரிமை சான்று வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

இது குறித்து,தமிழக வாழ்வுரிமை கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச்செயலா் சோ.சுரேஷ் கேரள முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கேரளத்தில் பல லட்சம் தமிழ் குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். அங்கு 1956 ஆம் ஆண்டுக்கு முன்னா் வாழ்ந்த தமிழக மக்களுக்கு மட்டும் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின்னா், அங்கு குடியமா்ந்தவா்களுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்படவில்லை. குடியுரிமை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசின் சலுகைகளையும் அவா்கள் பெற முடியும். ஆகவே, கேரளத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் குடியுரிமை சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT