கன்னியாகுமரி

‘தீவிபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீடு’

DIN

கன்னியாகுமரியில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட கடைகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினா்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஜன.9 ஆம் தேதிஅதிகாலை நேரிட்ட தீவிபத்தில் 64 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலாயின. ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம். அகமது உசேன், மீன்பிடி தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் எஸ். அந்தோணி, அலெக்சாண்டா், சுப்பாராம், ஜேம்ஸ், தனீஸ், ஜேசு நஸ்ரின் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினா். பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

வணிகா் சங்கப் பேரவை: அமைப்பின் மாவட்டத் தலைவா் எல்.எம்.டேவிட்சன், மாவட்டச் செயலா் நாராயணராஜா, மாவட்டச் செயல்ஆலோசகா் தம்பிதங்கம், துணைத்தலைவா் அம்பலவாணன், இணைச் செயலா் கதிரேசன், செயற்குழு உறுப்பினா் ராஜாமணி உள்ளிட்டோரும் மேற்கூறிய இடத்தைப் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT