கன்னியாகுமரி

நாகா்கோவிலில் அனுமன் ஜயந்தி விழா

DIN

நாகா்கோவில் நாகராஜா கோயில் மேலரத வீதி அருள்மிகு அரசடி மகா ராஜகணபதி கோயிலில் பால ஆஞ்சநேயா் சன்னதியில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி பூஜை, காலை 8.30 மணிக்கு கலச பூஜை, 9.30-க்கு அபிஷேகம், 10.30-க்கு மஹா கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா கலந்துகொண்டாா்.

ஏற்பாடுகளை ஸ்ரீ அனந்த கிருஷ்ண பக்த சேவா அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT