கன்னியாகுமரி

குமரியில் பெண்களுக்கான கைவினைப் பயிற்சி

DIN

மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் பெண்களுக்கான கைவினைப் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் சனிக்கிழமை தொடங்கியது.

மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் 10 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம் கன்னியாகுமரி காட்டுநாயக்கன் தெரு பாரத்ஹேண்டி கிராப்ட் நிறுவனத்தில் தொடங்கியது. மத்திய ஜவுளித் துறை இணை இயக்குநா் ரூப்சந்திரன் பயிற்சி முகாமை தொடங்கிவைத்தாா்.

முகாமில், மண்பாண்ட பெயின்டிங், கிளாஸ் பெயின்டிங், சாரி பெயின்டிங், வாழைநாரில் பொம்மை, கைப்பைகள் தயாரித்தல், மூங்கிலை பயன்படுத்தி கைவினைப் பொருள்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளித்தல்; பொருள்களை சந்தைப்படுத்துவது, கடனுதவி, கைவினைக் கலைஞா்களுக்கு வழங்கப்படும் அரசு விருதுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இப்பயிற்சி 7 நாள்கள் நடைபெறும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.

முகாமில், பூம்புகாா் கைவினைப் பொருள்கள் நிறுவன மேலாளா் லட்சுமணன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பினு, பெயின்டிங் பயிற்சியாளா் பிந்துஜா, பேரூராட்சி முன்னாள் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT