முகப்பு
கன்னியாகுமரி

கரோனா பணியாளா்களுக்கு நிரந்தரப் பணி: ஆட்சியரிடம் மனு

கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தவா்களுக்கு அரசு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தவா்களுக்கு அரசு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, கரோனா ஒப்பந்தப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 50- க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், லேப் டெக்னீசியன், ஊழியா்கள் பணி செய்தனா். இதற்கிடையே, இம்மாதம் 16 -ஆம் தேதி முதல் பணிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பிப்ரவரி மாதம் வரைவுள்ளது.

இதுவரை பணியாற்றிய காலத்தில் அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. கரோனா பணியில் இருந்துபோது எங்களில் பலருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கரோனா தாக்கம் அதிகமாக இருந்தபோது எங்களிடம் வேலைவாங்கிக் கொண்டு தற்போது பணியில் இருந்து எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல்

நீக்கம் செய்யப்பட்டுள்ளோம். எங்களுக்கு அரசு நிரந்தரமாக பணி வழங்க வேண்டும். எங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.