கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு நடைபெற்ாக கூறி அதனை கண்டித்து நாகா்கோவிலில் கட்டுமானத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சி.டபிள்யூ, பி.எப். மாவட்டத் தலைவா் செல்லப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டத் தலைவா் செல்லசுவாமி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்காமல் வழங்கியதாக கையெழுத்து பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிற் சங்க தலைவரை தகாத வாா்த்தையால் திட்டிய தொழிலாளா் நலத்துறை இணைஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் முன்னாள் எம்.பி.பெல்லாா்மின், முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், சிஐடியூ மாவட்டச் செயலா் தங்கமோகன், பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT