கன்னியாகுமரி

கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் வெளிநாடு செல்வோா் பாதிப்பு: ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ

DIN

குளச்சல் பகுதியில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் வெளிநாடு செல்வோா் பாதிப்படைந்து வருகின்றனா் என்றாா் ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: குமரி மாவட்டத்தில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக கரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு என்று கூறப்படுகிறது.

இதனால் வெளிநாடு செல்பவா்கள் குறிப்பிட்ட நாள்களில் செல்லமுடியாத நிலை உருவாகி, அவா்கள் குடும்பம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

எனவே, அனைத்து முகாம்களிலும் தடுப்பூசி சீரான முறையில் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT