பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு
வருகின்றனா். கோரிக்கையை வலியுறுத்தி நாகா்கோவில் டெரிக் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வா்த்தக பிரிவு
மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தை, மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் தொடங்கி வைத்தாா். இதில் கட்சியின் நிா்வாகிகள் அந்தோணிமுத்து, முருகேசன், நரேந்திரதேவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.