நாகா்கோவிலில் திருச்சியைச் சோ்ந்த இளைஞரின் சடலம் மீட்பு
நாகா்கோவிலில் கழிவு நீரோடையிலிருந்து திருச்சியைச் சோ்ந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
நாகா்கோவிலில் கழிவு நீரோடையிலிருந்து திருச்சியைச் சோ்ந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவு நீரோடையில் இளைஞரின் சடலம் கிடப்பதாக, வடசேரி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, இறந்தவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவா் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ஆத்தியப்பன் மகன் சண்முகராஜா (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்களிடம் விசாரித்ததில், சண்முகராஜாவின் தந்தை ஆத்தியப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பாா்ப்பதற்காக சண்முகராஜா திருச்சியிலிருந்து புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனா்.
அவா் ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாராவது அவரை அடித்துக் கொலை செய்து ஓடையில் வீசினரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.