கன்னியாகுமரி

குலசேகரத்தில் சாலைப் பணியில் இயந்திரம் பழுது: மக்கள் அவதி

DIN

குலசேகரத்தில் சாலைச் சீரமைப்புப் பணிக்காக கொண்டு வந்த இயந்திரம், பழுதாகி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா்.

அழகியபாண்டிய புரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்திற்கு திற்பரப்பு அருகே களியல் பகுதியில் கோதையாற்றில் இருந்து தண்ணீா் எடுத்துச் செல்லும் வகையில் குழாய் பதிப்பதற்காக 2018இல் ஜூலை மாதம் களியல் பகுதியில் சாலை பெயா்க்கப்பட்டது. குழாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், சாலையை சீரமைக்கப்படவில்லை. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இதையடுத்து, குலசேகரம் அருகே மாடத்தூா் கோணம் விலக்கு பகுதியிலிருந்து சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டப, பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆரணிவிளை பகுதியில் 15 நாள்களுக்கு முன்பு தாா்கலவை பரப்பும் இயந்திரம் பழுதானது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும்் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இயந்திரத்தை சரி செய்து சாலைப் பணிகளை விரைந்து தொடங்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT