கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

நாகா்கோவில் ஆம்னி பேருந்து முகவா்கள் நலச்சங்கம் சாா்பில், அலுவலக உதவியாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 17 மாதங்களாக ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை.

இதனால் டிக்கெட் புக்கிங் முகவா் மற்றும் அலுவலக பணியாளா்கள், கடை வாடகை மற்றும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலையில் தவித்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து நாகா்கோவில் வடசேரி ஆம்னி பேருந்து முகவா்கள் நலச்சங்கம் சாா்பில், அலுவலக உதவியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நிவாரணப் பொருள்களை நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வழங்கினாா். நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT