கன்னியாகுமரி

புயலில் மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு ரூ.2.40 கோடி நிதியுதவி

DIN

டவ் தே புயலில்போது கடலில் மீன்பிடிக்கச் சென்றுகாணாமல் போன மீனவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.2.40 கோடி வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சா் த.மனோ தங்கராஜ், மீன்வளத் துறை ஆணையா் கருணாகரன், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆகியோா் முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன் வளத்துறை அமைச்சா் அனிதாஆா்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, 12 மீனவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, நாகா்கோவில் கோட்டாட்சியா் சேதுராமலிங்கம், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், துணை இயக்குநா் (மீன்வளத் துறை) காசிநாதபாண்டியன், கடலரிப்பு தடுப்புக் கோட்ட செயற்பொறியாளா் வசந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT