குளச்சல் பள்ளி மாணவிகள் கட்டுரைப் போட்டியில் சாதனை
கட்டுரைப் போட்டியில் குளச்சல் அரசுப் பள்ளி மாணவிகள் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
கட்டுரைப் போட்டியில் குளச்சல் அரசுப் பள்ளி மாணவிகள் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,, இளைஞா் மற்றும் சுற்றுச் சூழல் சாா்மன்றம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில், ஆனக்குழி குறுவள மைய அளவில், குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகள் தன்யா, மதுமிதா, ரிஷாபா்ஹானா ஆகியோா் முதல் 3 இடங்களை பெற்றனா். அந்த மாணவிகளுக்கு ஆனக்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் விமலா ஸ்டெல்லாபாய் பரிசு வழங்கினாா். குளச்சல் வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயசந்திரன் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், குருந்தன்கோடு வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் லாரன்ஸ், குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பிஷிஜாஸ்மின், ஆசிரியா்கள் ராபா்ட்பாபு, பிரேமலதா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி நசீராபீவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.